அடக்கொடுமையே.. ஜீன்ஸ் போட்டது ஒரு தப்பா! 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! பதற வைக்கும் சம்பவம்!!



girl-murdered-by-relatives-for-wearing-jeans-pant

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தை அடுத்த  கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்த நிலையில் அவர் தனது மனைவி மற்றும் 17 வயது மகளுடன் அங்கே சென்று வசித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு அனைவரும் சொந்த கிராமத்துக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது 17 வயது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்துள்ளார். அதற்கு அந்த சிறுமியின் தாத்தா மற்றும் உறவினர்கள் சிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு ஜீன்ஸ் பேண்ட்டெல்லாம் போடக்கூடாது. இந்திய உடைதான் அணிய வேண்டும் என அந்த சிறுமியிடம் கூறியுள்ளனாராம். அதனை சிறுமி கேட்கவில்லை, மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

Jeans

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சிறுமியை பயங்கரமாக தாக்கி, சுவற்றில் மோதி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் கொண்டு சென்று மேம்பாலத்திற்கு கீழே தூக்கி போட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமியின் உடல் பாலத்தில் மாட்டி தொங்கியவாறு இருந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்த தாத்தா மற்றும் உறவினர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.