பள்ளி மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!. அரசு அறிவிப்பு!
ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு இனி வீட்டுப்பாடம் கிடையாது எனவும், மறுநாள் எந்தெந்த நோட்டு புத்தகங்கள் தேவை என முன்கூட்டியே சொல்ல வேண்டும் என டெல்லி அரசு கூறியுள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெளிவான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி பள்ளிக் கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளின் ஸ்கூல் பேக் அதிகபட்சமாக எவ்வளவு எடையைக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு - 1.5 கி.கி
மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு - 2 – 3 கி.கி
நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு - 4 கி.கி
எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு - 4.5 கி.கி
பத்தாம் வகுப்பு - 5 கி.கி
மத்திய அரசு பள்ளி மாணவர்களின் புத்தகப் பை எடையை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தியதைத் தொடர்ந்து டெல்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இது பல பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது.