பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இதுவே முதல்முறை.. 10மாத குழந்தைக்கு அரசு வேலை வழங்கிய ரயில்வே.! ஏன்? என்ன காரணம்??
சத்தீஸ்கரில் விபத்தில் பெற்றோரை இழந்த 10 மாத குழந்தைக்கு அரசுப் பணி வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் யாதவ். இவர் பிலாயில் உள்ள ரயில்வே யார்டில் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சு யாதவ். இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி சாலை விபத்து ஒன்றில் ராஜேந்திர குமார் யாதவ் மற்றும் அவரது மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களது 10 மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. தற்போது அந்த குழந்தையை அவரது பாட்டி வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கருணையின் அடிப்படையில் அந்தப் 10 மாத குழந்தைக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு 18 வயது வயதாகும்போது தேசிய போக்குவரத்து துறையில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு வெளியிட்டது மட்டுமின்றி வேலை வழங்க ரயில்வே பதிவேடுகளில் குழந்தையின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருணையின் அடிப்படையில் இவ்வாறு 10 மாத குழந்தைக்கு அரசு பணி வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. மேலும் பெற்றோரை இழந்த அந்த குழந்தைக்கு, அனைத்து உதவிகளும் விதிகளின்படி ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.