ATM மிஷினில் இப்படியும் ஒரு திருட்டா இந்த கொடுமைய நீங்களே பாருங்க.!



gujarath---soorath---atm-mechine---money-escaped

ஏடிஎம் மிஷினில் பணம் வருவதற்கு முன்பே விரலை நுழைத்து நூதனமாக 1.54 லட்சம் வரை திருடிய பலே கில்லாடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் யூனியன் வங்கி கிளையின் ஏடிஎம் மெஷின் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த மெஷினில் பணம் எடுப்பதற்கும் மீத பணம் இருப்பதற்குமான கணக்கு வழக்கு தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்துள்ளது.

இதனால் வங்கி மேலாளர் அனுப் சிங்கிற்கு சந்தேகம் ஏற்பட்டு ஏடிஎம் மிஷினில் இருந்த கேமரா பதிவுகளை பரிசோதித்து உள்ளார். அதில் ஒருவரின் செயல்பாடு அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பெயர் ஹர்ஸ் படேல் என்பது தெரியவந்தது. மேலும் அவர் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கும் அதிகப்படியான பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். எப்படி எடுத்தார் என்பது குறித்து தெரிவிக்கும் போது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எவ்வாறெனில் ஏடிஎம் கார்டை சொருகி பணம் எடுக்கும்போது பணம் வெளிவரும் இடத்தில் மெசின் எண்ணுவதற்கு முன்பாகவே தன்னுடைய விரலை நுழைத்து பணம் எடுத்தது தெரிய வந்துள்ளது. அவ்வாறு அவர் எக்ஸ்டராவாக எடுத்தபணம் அவர் கணக்கில் கழிக்கப்படாது.  பணம் அதிகமாக எடுத்தால் மாட்டிக் கொள்வோம் என்பதை அறிந்த அவர் அவ்வப்போது சிறு சிறு தொகையாக 1.54 லட்சம் வரை எடுத்துள்ளார்.