பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து.. கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை மட்டும் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 8 பேர் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நோயாளிகள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் கொரோனாக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக நிகழ்வு ஏற்ப்பட்டுள்ளது.