பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடக்கருமமே... புதுமணத் தம்பதிகள் தங்கி இருந்த லாட்ஜ் அறையில் ரகசிய கேமரா... காவல்துறை அதிரடி நடவடிக்கை.!
கேரள மாநிலத்தில் உள்ள தனியார் லாட்ஜில் ரகசிய கேமரா வைத்து கண்காணித்து வந்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் திருமணம் ஆன இளம் தம்பதியினர் தங்கி இருக்கின்றனர். அவர்கள் தங்கி இருந்த அறையில் கொசு மருந்து வைக்கும் இயந்திரத்திற்குள் ரகசிய கேமராவை வைத்து விடுதி ஊழியர் அந்த வீடியோவை வைத்து தம்பதிகளை மிரட்டி இருக்கிறார்.
மேலும் அவர் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அடைந்த புதுமணத் தம்பதியினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அவர்களின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர்.
பணம் தருவதாகக் கூறி லாட்ஜு ஊழியரை தனியாக வரவழைத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி அறையில் ரகசிய கேமரா வைத்து விடுதியில் தங்கியிருந்த அவர்களை ஊழியர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.