#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இது குற்றமே இல்லை , உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு , நாடு முழுவதும் உற்சாகம், எதற்காக தெரியுமா?
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377 ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மேஜர் ஆன இரு ஆண்களோ அல்லது பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் குற்றம் எனவும் அவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 377 ஆவது பிரிவின்படி ஆயுள் தண்டனை வழங்கப்படும் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் வழங்கப்படும் சட்டம் நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில் இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அதிரடியாக தீர்ப்பளித்தது.
மேலும் இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 2013ம் ஆண்டு இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 377 ஆவது சட்ட பிரிவின் படி தண்டனை அளிக்கப்படும் என தீர்ப்பு வழங்கியது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடன கலைஞர் நவ்தீஜ் ஜவ்கர் உள்பட பலர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இறுதி கட்டமாக நடந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் எனவே இயற்கைக்கு முரணான பாலியல் உடலுறவு தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்றும், ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377 ரத்து செய்யப்படுகிறது எனவும் அதிரடியாக தீர்ப்பளித்தார்.