#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நள்ளிரவில் நிர்வாணப்படுத்தி, இளம்பெண்ணுக்கு கணவர் அரங்கேற்றிய கொடூரம்! அதுவும் ஏன் தெரியுமா?
ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மனைவியை சாமியாரிடம் அழைத்துச் சென்று அவரை நிர்வாணப்படுத்தி உடல் முழுவதும் சாம்பலை பூசி பூஜை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பிம்பிரி சின்வாட் என்ற பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் அவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளது. இந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறக்காததால் கணவர் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் வரதட்சணை கேட்டு அவரது தாய் வீட்டிற்கும் அனுப்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஆண் குழந்தை பிறப்பதற்காக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை சாமியார் ஒருவரிடமும் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த சாமியார் அவரை நிர்வாணப்படுத்தி அவர் முழுவதும் சாம்பல் மற்றும் குங்குமத்தை பூசி வினோத பூஜை செய்துள்ளனர். மேலும் சாம்பலை சாப்பிடவும் வைத்துள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்த அப்பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்த புகாரில் அவர் தனது கணவர் ஆண் குழந்தைக்காக தனக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் போலீசார் அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.