#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அவ பொணத்த கள்ள புருஷன் வீட்டுக்கே அனுப்புங்க.." இறந்த பின்பும் அவமானப்பட்ட பெண்.!! கள்ளக்காதல் விபரீதம்.!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இறந்த பெண்ணின் உடலை அவரது கணவர் வீட்டில் வாங்க மறுத்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
வெளிநாட்டு மாப்பிள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(41). வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வரும் இவருக்கும் கடையாளுமூடு பிரின்சி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் சுனில் குமார் வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றார்.
ஆட்டோ டிரைவருடன் கள்ளக்காதல்
இந்நிலையில் பிரின்சிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது ஆட்டோ ஓட்டுநரான அபினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. மேலும் இருவரும் தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய சுனில் குமாருக்கு மனைவியின் கள்ளத்தொடர்பு தெரிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் பிரின்சியை கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி... பட்டப் பகலில் கொடூர கொலை.!! மர்ம நபர்கள் தலைமறைவு.!!
பிள்ளைகளை தவிக்க விட்டு காதலனுடன் ஓட்டம்
கணவர் கண்டித்ததால் கோபமடைந்த பிரின்சி 2 மகன்களையும் வீட்டில் விட்டுவிட்டு தனது காதலனுடன் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து சுனில் குமார் கொடுத்த புகாரின் பேரில் ராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருந்த காதலர்களை காவல்துறையினர் மார்த்தாண்டம் அழைத்து வந்தனர். மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது தனது காதலனுடன் தான் செல்வேன் என பிரின்ஸி தெரிவித்தார். மேலும் அவரது இரு மகன்களும் தாயுடன் செல்வோம் என கூறியதற்கும் பிரின்சி மறுத்துவிட்டார்.
அதிர்ச்சி மரணம்
இந்நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்த பிரின்சிக்கு திடீரென உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சுனில் குமாரிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சுனில் குமார் குடும்பத்தினர் பிரின்சி உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அவரது உடலை கள்ளக்காதலன் அபினேஷ் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு கூறி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்த காவல்துறையினர் பிரின்சி உடலை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இதையும் படிங்க: ஆடு மேய்க்க சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்... அண்ணன், தம்பி அதிரடி கைது.!!