#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. இப்படியொரு மனுஷனா.! மனைவிக்காக திருமணமான 20 நாளில் கணவர் செய்த காரியம்.! அதிர்ந்த கிராமத்தினர்!!
ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தை சேர்ந்த கிலா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் மனோஜ்குமார் சிங். இவருக்கு துர்க்கடியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மே 10 ஆம் தேதி இருவருக்கும் திருமணமும் நடைபெற்றுள்ளது. ஆனால் பிரியங்கா கடந்த 10 வருடங்களுக்கு மேல் ஜிதேந்திரா விஸ்வகர்மா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
ஒரு சில காரணங்களால் இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பிரியங்கா குமாரியை மனோஜ்குமார் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் தனது காதலரை மறக்க முடியாமல் தவித்து வந்த பிரியங்கா தொடர்ந்து அவருடன் போனில் பேசி வந்துள்ளார். மேலும் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்ய திட்டமிட்டு அதற்கு முயற்சி செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை பார்த்து மடக்கி பிடித்த கிராமத்தினர்கள் இருவரையும் மனோஜ் குமாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் மனோஜ் குமார் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது மனைவி பிரியங்காவை அவரது காதலனுடனே சேர்த்து வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.