மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை கலாய்த்த கும்பல்.. தட்டிக்கேட்ட கணவன் கொடூர கொலை.. நெஞ்சை உலுக்கும் துயரம்.. கண்ணீரில் புதுமணப்பெண்.!
புதுமணத்தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மனைவியை கிண்டல் செய்தவர்களை, கணவர் தட்டிக்கேட்டதால் அவரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் வசித்து வருபவர் ஷபீர் லால்பரியா. இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணமாகிய நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது வழியில் மோஹ்சின் என்ற நபர் தனது மனைவியை கிண்டல் செய்வதை கண்ட ஷபீல் மிகவும் கோபமடைந்தார்.
இதனால் ஆவேசமடைந்த ஷபீர் மோஹ்சினை அவதூராக திட்ட, இருவருக்கும் இடையில் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கிவிட்டு இருக்கின்றனர். இருப்பினும் இருவருக்குமிடையே தகராறு கைகலப்பாகியது.
இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள், அவர்கள் இருவருக்குமிடையே பஞ்சாயத்து பேசி கொண்டிருந்த நிலையில், மோஹ்சின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷபீரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஷபீரை அப்பகுதியினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அத்துடன் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி கதறி அழுதுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மோஹ்சின் மீது வழக்குப்பதிவு செய்து மோஹ்சின் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.