#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
3 மாத கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே கணவனை கொலை செய்த அதிர்ச்சி வீடியோ!.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த பினராய்- அம்ருதா தம்பதியினருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், அம்ருதாவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார் பினராய். தம்பதியினர் மருத்துவமனை வாசலில் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பினராயின் தலையில் தாக்கியுள்ளார்.
பினராயின் தலையில் இரும்புகம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார், சம்பவ இடத்திலேயே பினராயி ரத்தவெள்ளத்தில் சரிந்தார். தனது கண்ணெதிரிலேயே தனது கணவன் தாக்கப்படுவதை அறிந்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து மருத்துவமனைக்குள் ஓடி உதவி கேட்டுள்ளார்.
இதனையடுத்து மற்றொரு பெண் அம்ருதாவை அடிப்பதற்கு துரத்தியுள்ளார். அப்பெண்ணிடம் இருந்து தப்பிப்பதற்காக அம்ருதா அங்கிருந்து ஓடியுள்ளார். இதனைத்தொடர்ந்து பினராயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் அம்ருதா உயர்ந்த சாதியை சேர்ந்தவர் என்றும், தாழ்ந்த சாதியை சேர்ந்த பினராயி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, அம்ருதாவின் தந்தை ஆட்களை வைத்து பினராயை கொலை செய்துள்ளார் என பினராயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.