மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொல்கத்தாவில் பரபரப்பு.. என் பொண்டாட்டிய நான் கொலை பண்ணிட்டேன்.. எப்போ வந்து அரெஸ்ட் பண்ணுவீங்க!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பஹலா குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் தாஸ் - சமப்தி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்படவே, ஆத்திரம் அடைந்த கார்த்திக் தாஸ் மனைவியின் கழுத்தை நிறைத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் போலீசுக்கு தொடர்பு கொண்டு தனது மனைவியை கொலை செய்து விட்டு வீட்டில் காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவியின் உடலை மறைத்து வைத்துவிட்டு வீட்டு வேலைகளை செய்து குழந்தைகளுக்கான உணவை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.
மேலும் தனது மனைவியின் தாயாரை அழைத்து குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்படியும் அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தன்னை அரெஸ்ட் செய்யும்படி கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.