மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் பேருந்தில் மனைவியை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற கொடூர கணவர்... நெஞ்சை பதற வைக்கும் துயரச்சம்பவம்!!
குஜராத் மாநிலம் சோட்டா உதய்வூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்ரித் ரத்வான் - மங்குபெண் தம்பதியினர். இதில் அம்ரித் ரத்வான் சூரத் மாவட்டத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். மங்குபெண் அரசு நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தினத்தன்று பீகாபூர் கிராமத்திலிருந்து தனது நடத்துனர் பணியை தொடர்ந்துள்ளார் மங்குபெண். அப்போது திடீரென அப்பேருந்தில் மங்குபெண் கணவர் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மங்குபெண்ணை சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார் அம்ரித்.
அதுமட்டுமின்றி மனைவி சாகும் வரை அவரின் அருகிலேயே அமர்ந்துள்ளார். இதனை பார்த்த சக பயணிகள் அலறி கத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் விரைந்து வந்து அம்ரித்தை கைது செய்துள்ளனர்.
மேலும் மங்குபெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து கணவர் அம்ரித்திடம் விசாரணை நடத்தியதில் மனைவியின் தவறான நடத்தையால் தான் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.