#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கதறிய கள்ளக்காதல் ஜோடி... பதறிய கணவன்... அட்வைஸ் கூறி அனுப்பி வைத்த காவல்துறை.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்காதலால் ஏற்பட்ட பிரச்சனையை காவல்துறை தலையிட்டு சமாதானம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் தனியார் பள்ளி ஆசிரியைக்கு அறிவுரை கூறி கணவருடன் சேர்ந்து வாழுமாறு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல்
கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ண புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். திருமணமான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது உறவினரான நபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.
வெடித்த குடும்ப பிரச்சினை
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. எனினும் வீட்டிற்குள் அந்தப் பெண் தனது கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். இதனை பார்த்த அந்தப் பெண்ணின் கணவன் தனது மனைவியை ஊர் மக்கள் முன்பாக அடித்திருக்கிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அடுத்த நாளும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவன் தாக்கியதில் மனைவி காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: ரயில்வே ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளியை காப்பாற்ற கட்டப்பஞ்சாயத்து.!!
தாக்கப்பட்ட கள்ளக்காதலன்
இந்நிலையில் தனது காதலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதை தொடர்ந்து அவரது கள்ளக்காதலன் அந்தப் பெண்ணை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்ட பெண்ணின் கணவர் கள்ளக்காதலனை கடுமையாக தாக்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சாயத்து செய்து வைத்த காவல்துறை
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண், அவரது கணவர் மற்றும் கள்ளக்காதலனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் தனது கணவர் மிகவும் கொடுமை செய்வதாகவும் அவருடன் வாழ விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தனது கள்ளக்காதலனுடன் தன்னை அனுப்பி வைக்குமாறும் காவல்துறையிடம் கோரிக்கை வைத்தார். எனினும் காவல்துறையினர் அந்தப் பெண்ணை சமாதானம் செய்து அவருக்கு அறிவுரை வழங்கி கணவருடன் சேர்ந்து வாழுமாறு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கம்... கர்ப்பத்தில் முடிந்த காதல்... 16 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை.!!