மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனுதினமும் கணவனுக்கு நரக வாழ்க்கை பரிசு; சோறு கூட போடாததால் விபரீத முடிவு.!
உத்திரப்பிரதேசம் மாநிலம், சம்பால் மாவட்டத்தில் உள்ள டானெரி, பமன்பூரி கிராமத்தில் வசித்து வருபவர் ஹேமந்த் (வயது 28). இவரின் மனைவி சந்திர் காளி. தம்பதிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதனிடையே, திருமணம் முடிந்த நாளில் இருந்து கணவன் - மனைவி இடையே தகராறு நடந்து வந்துள்ளது. எப்போதும் இருவரும் எலியும் - பூனையுமாகவே குடித்தனம் நடத்தி இருக்கின்றனர். அவ்வப்போது மனைவி காளி தனது கணவரை தாக்கியதாகவும் தெரியவருகிறது.
கணவர் தற்கொலை
பொறுமையாக வாழ்ந்து பார்த்த ஹேமந்த், ஒருகட்டத்தில் விரக்தியில் வேறு வழியின்றி கடந்த 06 ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவந்த நிலையில், ஹேமந்த் தனது கைகளில் எழுதிய தற்கொலை குறிப்பு தொடர்பான தகவல் தெரியவந்தது.
இதையும் படிங்க: திருமணம் முடிந்த சிலமணிநேரத்தில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்; வாக்குவாதத்தில் வெறிச்செயல்.!
அதாவது, "கடந்த 2 நாட்களாகவே எனது மனைவி எனக்கு உணவு கொடுக்கவில்லை. என்னை அவர் சித்ரவதை செய்கிறார். மனைவி வேறொருவருடன் காதலில் இருந்துகொண்டு என்னை துன்புறுத்தி வருகிறார். எனது மரணத்திற்கு என் மனைவியே காரணம்" என இடதுகையில் எழுதி தற்கொலை செய்துள்ளார் என்பது அம்பலமானது. இதனையடுத்து சந்திர் காளியை கைது செய்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவில் வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்து சோகம்; 9 பேர் பரிதாப பலி.!