மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த சிலமணிநேரத்தில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்; வாக்குவாதத்தில் வெறிச்செயல்.!
அன்பு மனைவியுடன் புதுமண வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே, அவரை ஈவு இரக்கமின்றி குத்திக்கொண்டு கணவனின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் கோலார் மாவட்டம், சம்பரசனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் நவீன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த பெண்மணி லிகிதா ஸ்ரீ (வயது 20). இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பின்னாளில் திருமணம் செய்யவும் முடிவெடுத்துள்ளனர்.
பெற்றோர் சம்மதத்துடன் கரம்பிடித்த புதுமண தம்பதிகள்
திருமணம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நேற்று தம்பதிகளுக்கு பெற்றோர்-உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நேற்று மாலை நேரத்தில் இவர்கள் தங்களின் வீட்டில் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவில் வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்து சோகம்; 9 பேர் பரிதாப பலி.!
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்
அப்போது திருமணம் செய்த தம்பதிகள் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அச்சமயம் நவீன் தனது வீட்டின் அறைக்குள் சென்றுள்ளார். பின்னாலேயே லிகிதாவும் சென்ற நிலையில், திடீரென இருவரும் அலறி இருக்கின்றனர். உறவினர்கள் பதற்றமடைந்த உள்ளே சென்று பார்த்தபோது, லிகிதா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். நவீன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது லிகிதாவின் மரணம் உறுதி செய்யப்பட்டது. நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், தம்பதிகளுக்கு இடையே எழுந்த வாக்குவாதத்தில், ஆத்திரத்தில் இருவரும் கத்தியை வைத்து மாறி-மாறி தாக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: சாக்கடைக்குள் விழுந்த தாய், குழந்தை பரிதாப பலி; மகனை இறுக்கப் பிடித்தவாறு சடலமாக மீட்பு.!!