மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துர்க்கைக்கு தலையை காணிக்கை கொடுத்த பக்தர்; கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு.!
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள பீஜாஷன் பகுதியில் துர்க்கை கோவில் உள்ளது. தற்போது நவராத்திரி திருவிழாக்களை முன்னிட்டு துர்க்கை கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது.
பக்தர்கள் பலரும் விரதம் இருந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி இருந்தனர். இதனிடையே, அங்கு வந்த ராஜ்குமார் என்ற இளைஞர், துர்க்கையை வணங்கியபின், பொதுமக்கள் முன்னிலையில் கத்தியை எடுத்தார்.
இதையும் படிங்க: அடக்கொடுமையே.. சொந்த மகள் 4 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம்.!! 40 வயது தந்தை தப்பியோட்டம்.!!
சிதறி ஓடிய பக்தர்கள்
இதனைக்கண்ட பக்தர்கள் அவரை யாரையோ தாக்கப்போகிறார் என பதறிப்போன நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக அவர் தனது கழுத்தை கரகரவென அறுத்தார். இதனால் பக்தர்கள் அலறி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
Hospital | FIle Pic
தீவிர சிகிச்சை
சிலர் ராஜ்குமாரை தடுத்து நிறுத்தி, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்துகையில், ராஜ்குமார் சுமார் 9 நாட்கள் விரதம் இருந்து துர்க்கைக்கு காணிக்கை செலுத்துவதாக கூறி வந்துள்ளார். அவர் கூறியபடி துர்க்கைக்கு காணிக்கையாக தலையை செலுத்த வந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: பொம்பளைங்க அவசரத்துக்கு ஒதுங்கக்கூட முடியல.. அத்துவானக்காட்டில்.. தொங்கிய சடலம்.. பகீர் சம்பவம்.!