பிறந்து 30 நாட்களேயான குழந்தைக்கு பெற்றோர் இழைத்த கொடுமை.. 40 இடங்களில் சூடு வைத்து பயங்கரம்.!



in Odisha Parents Torture New Born Baby 

 

ஒடிசா மாநிலத்தில் உள்ள நரங்கிபூர் மாவட்டம், ஹண்டல்படா கிராமத்தில் வசித்து வரும் தம்பதிக்கு, கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து ஒரு மாதமேயாகும் குழந்தைக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத பெற்றோர், மூடநம்பிக்கையில் குழந்தையை கோவிலுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு குழந்தையின் உடலில் தீயசக்தி புகுந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பெண்ணை காதலிப்பதாக நடித்து பலாத்காரம்; யூடியூபர் அதிரடி கைது.!

odisha

உடலில் சூடு

இதனால் தீய சக்தியை விரட்டுகிறேன் என்ற பெயரில், குழந்தையின் தலை, வயிறு பகுதிகளில் இரும்பு கம்பியால் சுமார் 40 முறை சூடு வைத்து கொடுமை இழைக்கப்ட்டுள்ளது. இதனால் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல், உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர் தம்பதியை சத்தமிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தவே, அதிகாரிகள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், தம்பதியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

இதையும் படிங்க: சர்க்கரை, சளி, கிருமித்தொற்று மாத்திரைகளில் 145 தரப்பரிசோதனையில் தோல்வி; மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.!