#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாற்று சாதி இளைஞருடன் காதல்... மகளை ஆணவக் கொலை... நாடகமாடிய பெற்றோர்... வெளியே வந்த உண்மை.!!
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் வேற்று சமூக இளைஞரை காதலித்ததற்காக இளம் பெண் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது தெரிய வந்திருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்தான் பகுதியைச் சார்ந்த 16 வயது இளம் பெண் ஒருவர் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சார்ந்த மாற்று சமூக இளைஞருடன் பழகி வந்திருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதனைப் பார்த்த கிராம மக்கள் அவர்களது உறவினிடமும் பெற்றோரிடமும் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து பெற்றோர் அந்தப் பெண்ணை வெளியே விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி என்று அந்த இளம் பெண் மீண்டும் அந்த இளைஞரை சந்தித்து இருக்கிறார். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கு தெரியவே அந்தப் பெண்ணை அடித்து உதைத்து கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை கயிற்றில் கட்டி சமையலறையில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடி இருக்கின்றனர்.
காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தபோது உடலில் காயங்கள் இருந்திருக்கிறது மேலும் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அறிகுறிகளையும் மருத்துவர்கள் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். இதனை வைத்து காவல்துறை விசாரித்ததில் அந்தப் பெண்ணின் பெற்றோர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால் அவர்களிடம் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆணவக் கொலை செய்த பெற்றோரை காவல்துறை கைது செய்தது.