#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாலையில் விரட்டிவிரட்டி தொல்லை கொடுத்தவன் மீது கல்லெறிந்து மாஸ் காட்டிய சிறுமி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரெய்லி மாவட்டம், பரதாரி பகுதியில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுவிட்டு, சிறுமி ஒருவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அச்சமயம், அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர், தன்னிடம் பேசுமாறு தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமி அவரை தவிர்த்து வந்தாலும், ஒருகட்டத்தில் இளைஞனின் செயல்பாடுகள் எல்லை மீறுவது போல தோன்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, இளைஞனின் மீது சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து வீசி இருக்கிறார்.
இதையும் படிங்க: குடிகார கணவனை செங்கலால் அடித்துக்கொன்ற மனைவி; குழந்தைகள் கண்முன் பறிபோன தந்தையின் உயிர்.!
#Watch: यूपी के बरेली के एक मनचले की सीसीटीवी फुटेज सोशल मीडिया पर वायरल है। फुटेज में देखा जा सकता है कि दो छात्राएं बाइक सवार मनचले को देखकर भाग जाती हैं, जबकि एक छात्रा हिम्मत दिखाते हुए पत्थर उठाकर उसे मारती है। इसके बाद मनचला वहां से भाग जाता है।#UttarPradesh #Bareilly pic.twitter.com/0f2CC1opUq
— Hindustan (@Live_Hindustan) September 7, 2024
இதனால் நிலைமையை உணர்ந்த இளைஞன், அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த விஷயம் குறித்த காணொளி வெளியாகி வைரலாகவே, காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீடியோ ஆதாரங்களின் பேரில் காவல்துறையினர் இளைஞருக்கு வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 11 வயது சிறுவன் கடத்திக்கொலை; ரூ.15 இலட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் அதிர்ச்சி செயல்.!