சாலையில் விழுந்த ராட்சத பாறாங்கல்; மீட்பு படையினருக்கு உதவிய காவலர்.. வைரலாகும் வீடியோ.!



in Uttarakhand Cop Helps Rescue Team 

உத்திரகாண்ட், உத்திரபிரதேசம், டெல்லி, மராட்டியம், குஜராத் உட்பட வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது உச்சம் கண்டுள்ளது. இதனால் அம்மாநிலங்களில் உள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அவ்வப்போது முக்கிய நகர் பகுதிகளில் சூழும் கடும் வெள்ளமானது, மக்களின் இயல்பு வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. 

ராட்சத பாறையை உடைக்க உதவிய காவலர்

இந்நிலையில், உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டம், பஞ்சாபுலியா கர்ணபிராயாக் பகுதியில் மலைச்சாலையில் பாறாங்கல் ஒன்று விழுந்தது. இந்த சம்பவத்தால் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்ட நிலையில், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். 

அச்சமயம் சாலை மீது விழுந்த பெரிய அளவிலான ராட்சத பாறையை, காவல்துறை அதிகாரியான பகத் லால் சுத்தியல் கொண்டு வெட்டி அகற்றி மீட்பு படையினருக்கு உதவி செய்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வரவேற்புகளை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: சாலையில் உடலில் ஒட்டுத்துணி இல்லாமல்.. நிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

இதையும் படிங்க: சிக்கன் பீஸுக்கு நடந்த சண்டை; கலவரமாக கல்யாண வீடு.. மாப்பிள்ளை Vs பெண் தரப்பு மோதல்.!