#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்துக்கள் தவறாமல் கடைப்பிடிக்கும் மகாசிவராத்திரி விரதம்; என்னென்ன பலன்கள் தெரியுமா?
இந்துக்களால் மிக விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று மகா சிவராத்திரி. இன்று இப்பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் விரதம் இருக்கும் முறைகளும் கூறப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி திருநாளை எப்படி விரதம் இருந்து கொண்டாடுவது என்பதை “மகா சிவராத்திரி கற்பம்” என்ற சிறிய நூல் கூறுகின்றது.
ஒரு காலத்தில் உலகம் உருவான போது அனைத்து உயிரினங்களும் சிவபெருமானிடம் ஆட்கொள்ளப்பட்டன. இதனால் மிகப்பெரிய இவ்வுலகம் செயலற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் கருணையே உருவான அம்பிகை கடுமையான விரதம் இருந்து இடைவிடாது தவம் செய்தார். இதனால் சிவபெருமான் மிகப்பெரிய இப்பூவுலகில் உயிரினங்களை மீண்டும் உருவாக்கி உலகத்தை இயங்க செய்தார்.
இவ்வாறு உலகம் மீண்டும் இயங்க அம்பிகை சிவபெருமானிடம் விரதமிருந்து வழிபட்ட காலத்தில் அனைத்து உயிரினங்களும் வழிபட வேண்டும் என்றும் அவ்வாறு வழிபட்டால் அனைத்து நலன்களும் பெற்று முக்தி அடைவர் என்றும் அம்பிகை வேண்டிக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனாகதி முனிவர் போன்றோர் சிவராத்திரி விரதம் இருந்ததால் விருப்பம் நிறைவேறப் பெற்றதாக புராண கதைகள் கூறுகின்றன.
அது முதல் இன்று வரை பல காலமாக இந்த மகா சிவராத்திரி திருநாள் கடைப்பிடிக்கபட்டு வருகின்றது.