சுங்க கட்டணத்தை ரத்து செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு; மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்.!



india - kerala - toolcate currency cut

கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன், இனி கேரளாவில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கூறியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

10 கோடிக்கும் அதிகமான கட்டுமானச் செலவு ஆன பாலங்களுக்கான சுங்கச் சாவடி கட்டணத்தை கேரளாவின் சுங்கச்சாவடி சட்டத்தின்படி, அம்மாநில அரசு வசூல் செய்தது. அதன்படி, கடந்த நவம்பர் மாதம் முதல் மாநில பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட 6 பாலங்களில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை அம்மாநில அரசு நிறுத்தியது. மீதமுள்ள 14 பாலங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

KERALA

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன், ‘எந்தப் பாலத்துக்கோ, சாலைக்கோ சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பினராயி விஜயன் அரசு தற்போது 28 பாலங்கள் மற்றும் சாலைகளுக்கான சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியுள்ளது. தற்போது 10 பாலங்கள் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சாலைகள் மற்றும் பாலங்களுக்கான அமைப்பு சுங்கக் கட்டணங்களை வசூல் செய்து, அதன்மூலம் பாலங்கள் கட்டுவதற்கு ஆன லோனை திரும்பச் செலுத்திவந்தன. கேரளா அரசு அதற்கான பணத்தை செலுத்தவிரும்புகிறது. எனவே, சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தவேண்டும்’ என்று தெரிவித்தார். 

KERALA

இதுதொடர்பான பொதுப்பணித்துறை அறிக்கையில், ‘24 பாலங்களில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தியது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு. இந்த பாலங்களை கட்டியதற்கான கட்டுமானச் செலவு 1,000 கோடி ரூபாய் அதிகமாகும். கும்பளம் சுங்கச் சாவடி மற்றும் பளிக்காரா சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது. குடிமக்களின் மீது சுமையை செலுவத்துவது சரியாகாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.