#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம்?.. வேலை செய்ய மறுக்கும் இந்திய ஊழியர்கள்..! காரணம்தான் என்ன?..!!
இந்தியாவில் மனித மேலாண்மை தீர்வுகள் வழங்கும் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் இந்தியாவில் பணியாற்றி வரும் ஊழியர்களின் மனநலம் மற்றும் அவர்களின் சிந்தனை தொடர்பாக பல நகரங்களைச் சார்ந்தவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.
அதன்படி இந்தியாவில் பணியாற்றி வரும் 25% ஊழியர்கள் பணிச்சுமை மற்றும் வேலைப்பளுவால் சோர்வடைவது தெரியவந்துள்ளது. அதேபோல 88% ஊழியர்கள் மன அழுத்தத்தால் அதிகளவு சம்பளம் வழங்கும் வேலையை தவிர்ப்பதும் உறுதியாகியுள்ளது.
அத்துடன் இன்றைய காலகட்டத்தில் வேலை செய்யும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை மனஅழுத்தம் தான். பணத்திற்காக வேலை செய்தாலும் தங்களின் வேலைப்பளுவால் மிகவும் துன்பப்படுகின்றனர்.