பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அயோத்தியில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை!
அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆண்டுக்கணக்கில் நடந்த சட்ட போராட்டங்கள் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தன. நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு நவம்பர் 9ஆம் தேதி அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயிலை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மேலும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில் அயோத்தியில் ஆகஸ்டு 15ஆம் தேதி தாக்குதல் நடத்தப் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக ரா உளவு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.