தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#BigNews: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து.. பயணிகள் காயம்.. பேரதிர்ச்சி சம்பவம்.!
அந்தியோதயா அதிவிரைவு வண்டியின் 10 பெட்டிகள் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில், 2 பேர் காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோக்மான்யா திலக் இரயில் முனையத்தில் இருந்து, பீகார் மாநிலத்தில் உள்ள ஜெய்நகரை இணைக்கும் வகையில் LLT-ஜெய்நகர் அதிவிரைவு அந்தியோதயா இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது கடந்த 2018 ஆம் வருடம் தான் விரைவு இரயிலில் இருந்து, அந்தியோதயா இரயிலாக மாற்றம் செய்யப்பட்டது.
இந்த இரயில் தனது பயணத்தின்போது பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை இணைக்கிறது. இதன் மொத்த பயணதூரம் 1958 கி.மீ ஆகும். இந்நிலையில், இந்த இரயில் இன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
பீகாரில் இருந்து 11061 LLT-ஜெய்நகர் அதிவிரைவு வண்டி புறப்பட்டு மும்பை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்த நிலையில், இரயில் இன்று மதியம் 03:10 மணியளவில் மும்பை நாசிக் அருகேயுள்ள லாஹவிட் - தேவலாலி இரயில் நிலையங்களை கடந்து செல்லும் போது திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
இரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், இரயில் அப்போது மிதமான வேகத்தில் சென்றுகொண்டு இருந்ததால் பெரும் அசம்பாவித விபத்து மற்றும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு இரயில் அவசர சேவையையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில், இரயிலில் பயணம் செய்த 2 பேருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், பிறர் அனைவரும் பேருந்துகள் உதவியுடன் நாசிக் அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவ்வழியாக செல்லும் 7 இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதனைப்போல, 2 இரயில்கள் இடையே நிறுத்தப்பட்டு அதன் பயண தூரம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 இரயில் சேவைகள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.