பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 2 பெண்கள், தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 6 பேர் கைது.. பரபரப்பு தகவல்.!
தையல் கற்றுகொள்ளவந்த சிறுமியை திட்டமிட்டு, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளிய 2 பெண்கள் மற்றும் சிறுமியை சீரழித்த 4 வாடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 4 வடிக்கையாளரில் ஒருவராக தமிழகத்தை சேர்ந்தவரும் இருந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பண்டேபாளையா பகுதியில் தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 16 வயதுடைய மகள் உள்ள நிலையில், இவருக்கு தையல் தொழில் கற்றுக்கொடுக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அப்பகுதியில், ராஜேஸ்வரி மற்றும் கலாவதி என்ற பெண்களிடம் தையல் படிக்க சிறுமியை பெற்றோர்கள் அனுப்பியுள்ளனர்.
சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த 2 பெண்களும், கேசவமூர்த்தி என்பவர் சிறுமியிடம் அத்துமீற அனுமதி செய்துள்ளனர். இந்த விசயம் தொடர்பாக வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் என்றும் மிரட்டவே, சிறுமியும் பயத்தில் எதனையும் கூறாமல் இருந்துள்ளார். இதனை சாதகமாகிய 2 பெண்களும், சிறுமியை விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளனர்.
சிறுமியை மேலும் 2 பேர் பலாத்காரம் செய்த நிலையில், மனதுடைந்துபோன சிறுமி பெற்றோரிடம் தகவலை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அங்குள்ள எச்.எஸ்.ஆர் லேஅவுட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரி, கலாவதியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ராஜேஸ்வரி மற்றும் கலாவதி விபச்சார தொழில் நடத்தி வந்த நிலையில், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கு தையல் கற்றுக்கொடுத்து வருவதாக நடித்துள்ளனர். மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் முகக்கவசம், கொரோனா தடுப்பு உடைகளையும் தைத்து கொடுத்துள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தினருக்கு இவர்களின் மீது நம்பிக்கை வந்துள்ளது. எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.
அந்தவகையில், தையல் கற்க வந்த சிறுமியை விபச்சாரத் தொழிலில் இறக்க முடிவெடுத்து துயரம் நடந்துள்ளது. ராஜேஸ்வரி மற்றும் கலாவதி அளித்த வாக்குமூலத்தின் பேரில் தமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்த கேசவமூர்த்தி, பெங்களூரை சேர்ந்த சத்யராஜ், சரத், ரபீக் ஆகியோரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், புகார் அளித்த 36 மணிநேரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.