பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட்ராசக்க.. உண்மை சம்பவத்தில் முதல்வராக நடிக்கும் முன்னாள் முதல்வர்.. உற்சாகத்தில் தொண்டர்கள்.!
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக தந்து பதவியை ராஜினாமா செய்து வீட்டில் இருந்தவாறு ஓய்வெடுத்து வருகிறார். மேலும், அவ்வப்போது கட்சி ரீதியான கூட்டங்களில் கலந்துகொள்வது உண்டு. சமீபத்தில், கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டபோது அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தையில் எடியூரப்பாவும் கலந்துகொண்டார்.
கர்நாடக மாநிலத்தை பொறுத்த வரையில் மிகவும் பலம்மிக்க தலைவராக இருந்து வரும் எடியூரப்பா, கன்னட திரையுலகில் கால்பதித்து இருக்கிறார். அம்மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தினை மையமாக வைத்து எடுக்கப்படும் கன்னட படத்தில் எடியூரப்பா முதல்வர் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
தனுஜா என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை, இயக்குனர் ஹரிஷ் எம்.டி. ஹள்ளி இயக்குகிறார். நீட் தேர்வை எழுத இயலாமல் தவித்த மாணவிக்கு, தேவையான உதவியை செய்து அவரின் வாழ்க்கைக்கு அன்றைய முதல்வர் எடியூரப்பா உதவி செய்திருந்தார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்படுவதாக தகவல் தெரியவருகிறது.
முதல்வராக நடிக்கவுள்ள எடியூரப்பா தொடர்பான காட்சிகள் பெங்களூர் மற்றும் ஹாவேரியில் வைத்து படமாக்கப்படவுள்ளன. படத்தின் படப்பிடிப்பு 90 % முடிந்துவிட்டதாகவும், விரைவில் படம் திரைக்கு வரும் என்றும் இயக்குனர் தகவல் தெரிவித்து இருக்கிறார். மேலும், திரைப்பட படப்பிடிப்பின் போது முன்னாள் முதல்வர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதாகவும் இயக்குனர் தெரிவித்தார்.