மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#144Section: பேனர் வைப்பதில் இருதரப்பு மோதல்.. கலவர சூழலால் காவல்துறை குவிப்பு.. 144 தடை அமல்.!
வி.டி சவர்காருக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்களை திப்பு சுல்தான் ஆதரவாளர்கள் நீக்கி தங்களின் பேனரை வைத்ததால் இருதரப்பு மோதல் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா நகரில் உள்ள அமீர் அஹமத் பகுதியில் திப்பு சுல்தான் ஆதரவாளர்கள் வி.டி சவர்கார்க்கு ஆதரவான பேனர்களை நீக்கி, அங்கு திப்பு சுல்தானின் பேனரை வைத்துள்ளனர்.
இதுகுறித்து இருதரப்பு இடையே வாக்குவாதம் எழுந்து மோதல் நடக்கவே, தகவல் அறிந்து சென்ற சிவமொக்கா காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி இருதரப்பையும் களைந்து செல்ல வைத்தனர்.
Shivamogga, Karnataka | Section 144 of the CrPC imposed after a group of Tipu Sultan followers tried to remove banners of VD Savarkar to install Tipu Sultan's banners in the Ameer Ahmad circle of the city. pic.twitter.com/rwyHdtnX1k
— ANI (@ANI) August 15, 2022
இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலை வருவதால், வன்முறை அல்லது கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்பை தவிர்க்க சிவமொக்கா நகர் முழுவதும் 144 தடை உத்தரவானது அமல்படுத்தப்பட்டுள்ளது.