மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவலரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மர்ம நபர்கள்; குடியால் பறிபோன உயிர்.!
போதையில் பணிக்கு வந்து பணியிட மாறுதலை சந்தித்த அதிகாரி, இறுதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் பூர்ணேஷ் (வயது 35). இவர் தீர்த்தஹள்ளி காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தை இருக்கின்றனர்.
இவர் அவ்வப்போது பணியில் லட்சோய்யமாக செயல்பட்டதால் பணியிட மாற்றம் போன்ற பிரச்சனையையும் சந்தித்து வந்துள்ளார். இறுதியாக தீர்த்தஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும்போதும், மது போதையில் அவ்வப்போது பணிக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மது போதையில் அவர் பணிக்கு வந்த நிலையில், உயர் அதிகாரிகளால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெளியே சென்று வருவதாக கூறி சென்றார்.
பின்னர் அவர் வீட்டுக்கு வராத நிலையில், மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் அவரின் சடலம் அங்குள்ள மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளதால், கொலையாளிகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது.