#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம் வழங்கப்படும்; கர்நாடக மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!
கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சியாக பொறுப்பேற்ற காங்கிரஸ், தான் தேர்தலில் அளித்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக அவ்வப்போது அமைச்சரவை ஆலோசனையும் நடந்து வருகிறது. இன்று அம்மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிலையில், அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக 10 கிலோ இலவச அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது 5 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், மீதமுள்ள 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம் கொடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிப்படி 5 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 கிலோ அரிசிக்கு மாற்றாக கிலோ அரிசிக்கு ரூ.34 என கட்டணம் நிர்ணயம் செய்து, மொத்தமாக ரூ.170 பணம் கொடுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.