தந்தையின் சடலத்துடன் மகன் பயணம்.. சட்டென கூறிய வார்த்தை.. எழுந்த தந்தை.!



karnataka stationary owner rebirth in ambulance

மஞ்சள் காமாலை

கர்நாடக மாநிலத்தில் சிகானின் பங்காபுரா பகுதியை சேர்ந்த பிஷ்டப்பா குடிமணி (45 வயது) என்ற நபர் ஸ்டேஷனரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்து சில ஆண்டுகளாகவே மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. சமீபத்தில் இவரது உடல்நிலை மிக மோசமான காரணத்தால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

நின்ற இதயத்துடிப்பு

திடீரென அவரது இதயத்துடிப்பு நின்று போய் இருக்கிறது. பல மணி நேரத்திற்கும் மேலாக மூச்சு வராமல் இருந்ததால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து ஆம்புலன்ஸில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்போது, ஆம்புலன்ஸில் அவரது இரு மகன்கள் மற்றும் மனைவி ஆகியோர் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: சாக்லேட் கொடுப்பதாக 13 வயது சிறுமியிடம் அத்துமீறல்; வீட்டை தாழிட்டு அதிர்ச்சி., அலறலில் அதிர்ந்துபோன அக்கம்-பக்கம்.!

karnataka

தாபாக்கு போலாம் வாங்கப்பா

குறிப்பிட்ட இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரின் இளைய மகன் அழுது கொண்டே, "அப்பா இங்கே பாருங்கப்பா நீங்க சாப்பிடுற தாபா. வாங்கப்பா போலாம்" என்று கூறி கதறி கதறி அழுதுள்ளார். அப்போது இறந்து போனவர் ஹா என்று கத்தியவாறு வேகமாக மூச்சை இழுத்துள்ளார் இதை பார்த்த குடும்பத்தினர் அவருக்கு இன்னும் உயிர் இருக்கிறது என்று கூறி மீண்டும் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

உயிர் தப்பித்தார்

அவருக்கு அங்கே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்கு கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். இது குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அவர் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் பதிவுகளும் வெளியிடப்பட்டு இருந்தது. அவை அனைத்தும் நீக்கப்பட்டது.

இதையும் படிங்க: "இது ஒயோ இல்லை, விலகியிரு" - காதல் ஜோடிக்கு கார் ஓட்டுனரின் கறார் எச்சரிக்கை.!