சாக்லேட் கொடுப்பதாக 13 வயது சிறுமியிடம் அத்துமீறல்; வீட்டை தாழிட்டு அதிர்ச்சி., அலறலில் அதிர்ந்துபோன அக்கம்-பக்கம்.!



in Karnataka Raichur 13 Year Old Minor Girl Raped 

ஆறாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம், ஹட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 11 வயதுடைய சிறுமி மகளாக இருக்கிறார். இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில், ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். 

சிறுமி தினமும் மத்திய வேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு, பின் பள்ளிக்குச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிறுமி சாப்பிட வீட்டிற்கு வந்தபோது, வழியில் அவரை அதே கிராமத்தில் வசித்து வரும் சந்திரசேகர் என்பவர் அழைத்துள்ளார். 

இதையும் படிங்க: "இது ஒயோ இல்லை, விலகியிரு" - காதல் ஜோடிக்கு கார் ஓட்டுனரின் கறார் எச்சரிக்கை.!

karnataka

சாக்லேட் தருவதாக சோகம்

தன்னுடன் வந்தால் சாக்லேட் தருவதாக கூறி சந்திரசேகர் சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி அலறிய நிலையில், அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பதறியபடி வந்தனர்.  

வீட்டின் கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்ததால், ஹட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து சிறுமியை மீட்டனர். மேலும், சந்திரசேகரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். 

இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்ஸோவில் கைது செய்துள்ளனர். 
 

இதையும் படிங்க: கும்பாவிஷேகத்தில் நடந்த அசம்பாவிதம்.. கிரேன் உடைந்து நேர்ந்த சோகம்.. ஒருவர் பலி.!