#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாயை நிர்வாணமாக்கி, மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்.. உள்துறை அமைச்சர் ஆறுதல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி பகுதியில் வசித்து வந்த ஒரு 24 வயது இளைஞர், அதே பகுதியில் வசித்து வந்த மற்றொரு இளம் பெண்ணை காதலித்துள்ளார். இவர்களது காதலை இருதரப்பு வீட்டினரும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தப்பி ஓடியுள்ளனர்.
இதன் காரணமாக அந்த பெண்ணின் வீட்டினர்கள் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இளைஞரின் தாயிடம் சென்று சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர்கள் அந்த தாயை ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதுமட்டுமல்லாமல் மின் கம்பம் ஒன்றில் அவரை கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த உள்துறை அமைச்சர் சம்பவம் நடந்த ஊருக்கு சென்று அந்த தாய்க்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.