கரூர்: தமிழுக்கு வந்த பகீர் சோதனை: அங்கன்வாடி மைய திறப்பு விழாவில் வேதனை.!



karur-kulithalai-nutrition-center-tamil-language

 

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, கீழ குட்டப்பட்டி கிராமத்தில், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கப்பட்டது. 

இந்த கட்டிடத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் இன்று தனது பொற்கரத்தால் திறந்து வைத்தார். புதிய அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவர் ஓவியங்களை கண்டு பலரும் வியந்துபோனார். 

இதையும் படிங்க: குடும்பப்பிரச்சனையில் விபரீதம்; மகனை கிணற்றில் தூக்கி வீசி, தாய் தற்கொலை.!

ஆனால், உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக, ஒவ்வொரு புகைப்படம் மற்றும் பிற விஷயங்களில் பதிவு செய்யப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தவறாக இருந்தது. 

இதனைக்கண்டு ஆசிரியை, எம்.எல்.ஏ, பொதுமக்கள் என அனைவரும் பதறிப்போன நிலையில், அவற்றில் உள்ள பிழைகளை சரி செய்யுமாறு எம்.எல்.ஏ அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றார். 

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கடைகளில் விளம்பரங்களுக்கு பிற மொழிகள் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. நிலைமை இப்படியிருக்க, ஆரம்ப கல்வியிலேயே ஆப்பு வைக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி

 

இதையும் படிங்க: 60 வயதில் தேவையா இதெல்லாம்?.. திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்; கிழவனின் கதைமுடித்த கணவன்.!