மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஷமாக மாறிய மயோனைஸ்.. குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் பலி.!! 85 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் புகழ்பெற்ற குழிமந்தி பிரியாணி சார்ந்த உணவகங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவ்வப்போது பிரியாணி சாப்பிடும் சிலர் பரிதாபமாக பலியாகுவது தொடர்கதையாகி வருகிறது.
85 பேருக்கு உடல்நல பாதிப்பு
இந்நிலையில் திருச்சூர் பகுதியில் கடந்த வாரம் குழமந்தி பிரியாணி சாப்பிட்ட 85க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் சாப்பிட்ட மயோனைசில் நச்சுத்தன்மை இருந்ததாகவும், அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.99 ரூபாயில் உயிரை பறிகொடுத்த புதுஜோடி.. கதறி துடிக்கும் குடும்பம்.!
பெண் உயிரிழப்பு
இதனிடையே மருத்துவமனையில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நுசைபா என்ற பெண்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இறுதிச்சடங்கிற்கு சென்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி.! சோகத்தில் குடும்பத்தினர்.!!