ஐயோ போச்சு! - இனி உங்கள் கம்ப்யூட்டர்கள் அனைத்தும் அரசின் கண்காணிப்பில்!



licence-to-spy-computer-for-10-govt-sectors


இந்தியாவில் பயன்படுத்தப்படும் அணைத்து கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் இனி மத்திய அரசின் 10 நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கணினி மற்றும் பிற உபயோக பொருட்கள் மூலம் பல்வேறு குற்ற நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. மேலும் பலர் தங்களை பற்றிய ரகசியங்களை கணினிகளில் யாருக்கும் தெரியாமல் சேமித்து வைக்கின்றனர். இன்னும் சிலர் இணையதளத்தின் மூலம் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

computer

மேலும் பலர் அரசாங்கத்தை ஏமாற்றும் நோக்கத்தில், தங்களை பற்றிய வருமானம், அவர்களின் நிறுவனத்தின் செயல்பாடுகளை மறைக்க கணினிகளை பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர், ரகசியமாக பல புகைப்படம் மற்றும் வீடியோ கோப்புகளையும் ரகசியமாக வைத்துக்கொள்ள தங்களது கணினிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை போன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், கணினிகளின் மூலம் அரங்கேறும் குற்றங்களை தடுக்கவும் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை உருவாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ள இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1 . நாட்டில் எந்த ஒரு கணினியிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகள் அணைத்தும் மத்திய அரசின் 10 நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

2 .  இந்த திட்டத்தின் மூலம், ஒரு கணினியில் இருந்து அனுப்பப்பட்ட, பெறப்பட்ட, சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

3 . தகவல் தொழிநுட்ப சட்டத்தின் 69 (1) பிரிவின்படி, குற்றங்களை தடுக்க, நாட்டின் பாதுகாப்பை காக்க உளவுத்துறை, சிபிஐ போன்ற 10 அமைப்புகளை கொண்டு மத்திய அரசால் கணினிகளில் உள்ள தரவுகளை கண்காணிக்க முடியும்.

computer

4 . இந்த கண்காணிப்பிற்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கும் இணைய பயன்பாட்டாரோ, இணைய சேவை வழங்கும் நிறுவனங்களோ, அல்லது தனி நபரோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதன் மூலம் அனைவரும் தவறான குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பார்கள் என மத்திய அரசு நம்பிக்கை வைத்துள்ளது.