ரூ.51 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி சென்ற லாரி ஓட்டுநருக்கு கொரோனா! பீதியில் போலீசார்



Liquor smuggling driver corono positive

மத்திய பிரதேசத்தை சேர்த்த லாரி ஓட்டுநர் ஹரியானாவில் இருந்து குஜராத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி சென்ற போது ராஜஸ்தான் எல்லையில் போலீசாரிடம் சிக்கினார். அவர் ஓட்டி வந்த லாரியில் ரூ.51 லட்சம் மதிப்புள்ள உயர்தர மதுபாட்டில்கள் இருந்துள்ளன.

அதில் 11424 விஸ்கி பாட்டில்களும் 1800 ஜின் பாட்டில்களும் இருந்துள்ளன. லாரியில் முன்பகுதியில் அவசர மருந்துபொருள்கள் என எழுதி ஒட்டிவிட்டு மதுபாட்டில்களை அந்த ட்ரைவர் கடத்தி சென்றுள்ளார்.

corono

புதன்கிழமை அதிகாலையில் கைதுசெய்யப்பட்ட அந்த ட்ரைவரை முதலில் பாலன்பூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அதே பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ட்ரைவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.

நேற்று வெளியான அதன் முடிவில் ட்ரைவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்தவர்களை கண்டறியும் ஆய்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரை கைது செய்யும் போது இருந்த போலீசார்களுக்கு கொரோனா பரவியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.