மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்டெய்னர் லாரி கார் மீது மோதி கோரவிபத்து...! அப்பளம் போல நொறுங்கிய கார்.. இருவர் மரணம்..!
கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, காரின் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம் அருகே, விழுப்புரம் நோக்கி கொசு மருந்து ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புகளை தாண்டி, எதிர்ப்பக்கமாக வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், காரின் உள்ளே இருந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின் இது குறித்து சக வாகனஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.