பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
கொள்ளையடித்த குஷியில் ஐ லவ் யூ... வீட்டின் உரிமையாளர்களுக்கு காதல் வலைவிரித்த கேடி திருடர்கள்.!
கோவா மாநிலத்தில் கொள்ளையடித்த திருடர்கள் அந்த வீட்டில் ஐ லவ் யூ என்று எழுதிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவா மாநிலம் மர்கோவாவில் ஆசிப் ஜெக் என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தார். இரண்டு நாட்கள் கழித்து அவர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
இருபது 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணமும் திருடு போயிருந்தது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் வீட்டு டிவி திரையில் ஐ லவ் யூ என்று கொள்ளையடித்தவர்கள் மார்க்கர் பேனாவால் எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தனர்.
கொள்ளையடித்த வீட்டில் கொள்ளையர்கள் லவ் யூ என்று எழுதிச் சென்ற சம்பவம் மிகவும் புதுமையாக உள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில் மல்கோவா காவல்துறையினர் கொள்ளை வழக்கு பதிவு செய்துள்ளனர்.