தன்னிடம் பேச சொல்லி கொஞ்சிய காதலியிடம் பேச மறுத்த காதலன்.! கடைசியில் காதலி எடுத்த விபரீத முடிவு..
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வி.வி நகரைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யாவுக்கு சிவபார்கவ் என்ற இளைஞனுடன் காதல் ஏற்ப்பட்டுள்ளது. சிறிது காலம் இருவரும் காதலித்து வந்த நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு சிவபார்கவ் ரம்யாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
அதனை அடுத்து ரம்யா தனது காதலனான சிவபார்கவ்விடம் தன்னிடம் பேசுமாறு கொஞ்சியுள்ளார். அதுமட்டுமின்றி நண்பர்கள் மூலமும் பேச முயற்சித்துள்ளார். ஆனால் சிவபார்கவ் ரம்யாவுடன் பேச விரும்பாததால் விரக்தியான ரம்யா தற்கொலை முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதன்படி வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். ரம்யா தற்கொலை முயற்சியில் ஈடுப்படுவதற்கு முன்பு அதனை நேரலையாக வீடியோ பதிவு செய்து தனது காதலனுக்கு பகிர்ந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மகள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து பார்த்த போது ரம்யா சடலமாக தொங்கியுள்ளார்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர்.