#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகனுக்காக மனைவியை ப்ரீசரில் வைத்த கணவன்; வாக்குமூலத்தால் அதிர்ச்சியான காவல்துறையினர்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் வசித்து வருபவர் சுமித்ரி. இவரது கணவர் பாரத் மிஸ்ரா. கடந்த சில நாட்களாகவே சுமித்ரி மாயமாகி இருந்த நிலையில், தனது மாமாவின் மீது சந்தேகம் உள்ளதாக சுமித்ரியின் சகோதரர்கள் காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், சுமுத்ரியின் சடலம் வீட்டில் இருந்த பிரீசரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கணவரிடம் விசாரிக்கவே, மனைவி மஞ்சள் காமாலை காரணமாக இறந்ததாகவும், இறுதிச் சடங்குக்கு மகன் மும்பையில் இருந்து வரவேண்டி இருந்த காரணத்தால் சம்பவத்தை மறைத்து அவரின் உடலை பிரிட்ஜில் வைத்ததாகவும் கூறியிருக்கிறார்.
இருப்பினும் கணவரின் பதிலில் சந்தேகம் எழுந்துள்ளதால், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.