பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்த கணவனுக்கு மகளை கொன்று துக்க செய்தி அனுப்பிய தாய்; கள்ளகாதலால் சோகம்.!
மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர் சமயமுத்து. இவரின் மனைவி மலர்செல்வி. தம்பதிகளுக்கு 7 வயதுடைய மகள், 5 வயதுடைய கார்த்திகா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். குடும்பத்தின் எதிர்காலத்திற்காக சமயமுத்து துபையில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையே, மதுரையில் குழந்தையுடன் வசித்து வந்த மலர்ச்செல்விக்கு, தர்மசுந்தர் (வயது 33) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனால் கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளது.
இதையும் படிங்க: தாயின் ஆண் நண்பர் தலையில் கல்லைப்போட்டு கொலை; சொல்லச்சொல்ல கேட்காததால் விபரீதம்.!
பெற்றெடுத்த மகள் கள்ளகாதலுக்காக கொலை
இதனிடையே, கடந்த மே 22ம் தேதி கள்ளக்காதல் ஜோடி தனிமையில் இருந்ததை 5 வயதுடைய சிறுமி நேரில் பார்த்துள்ளார். இதனால் மகள் வெளியே விஷயத்தை சொல்லிவிடுவார் என பயந்த மலர்செல்வி, நேற்று மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பின் ஊரை நம்பவைக்க மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
அதிகாரிகள் விசாரணை நடத்திவந்தபோது சிறுமியின் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் மலர்செல்வியிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதில் அதிர்ச்சிதரும் விஷயம் என்னவென்றால், 26 வயதாகும் தர்ம சுந்தருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கள்ளக்காதல் பழக்கத்தால் இரண்டு குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: மனைவியின் தங்கையுடன் திருமணம்.. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் படுபயங்கரம்; சரமாரியாக வெட்டிக்கொலை.!