விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
மதுரை: தொடர் மழையால் உண்டான திடீர் அருவி; ஒத்தக்கடை ஆனைமலையில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்.!
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு குளுகுளு சூழ்நிலையை அனுபவித்து வந்தனர்.
இம்மழை காரணமாக மதுரை மாநகரில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளநீராகவும் வீதிகளில் தேங்கியது. சிம்மக்கல் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை நீரில் மூழ்கிய காரணத்தால், அவ்வழியே வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு பின் நீரை வெளியேற்றி அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: காலையிலேயே வெளுத்து வாங்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
ஆனைமலை அருவி
இந்நிலையில், மதுரை மாநகரில் உள்ள ஒத்தக்கடை, ஆனைமலை பகுதியில் தொடர் மழையின் எதிரொலியாக திடீர் அருவி உண்டாகி நீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு எதற்ச்சையாக சென்ற இளைஞர்கள் குழு, குளித்து மகிழ்ந்தது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோ ஒன்றிநியூஸ் 18 தமிழ்நாடு
#JUSTIN மதுரையில் கொட்டிய மழை - ஒத்தக்கடை யானைமலை திடீரென உருவான அருவியில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள் #Madurai #YanaiMalaiHill #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/SPhXkZZ4Km
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 21, 2024
இதையும் படிங்க: வெளுத்து வாங்கப்போகும் கனமழை; பேருந்து ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவுரை.!