பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#BigNews: அம்பாசமுத்திரம் அம்பானி பட நடிகை, பெண் எம்.பி., எம்.எல்.ஏ கணவருடன் கைது.. காவல் துறை அதிரடி நடவடிக்கை.!
தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நாயகியாக நடித்த நடிகையும், அமராவதி தொகுதியின் சுயேச்சை எம்.பியுமான நடிகை நவநீத் கவூர் ராணா மற்றும் அவரின் கணவர் ரவி ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீத் கவூர் ராணா. இவரின் கணவர் அமராவதி, பாந்த்ரா தொகுதி எம்.எல்.ஏ ரவி ராணா. இவர்கள் இருவரும் இன்று மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நவநீத் கவூர் ராணா பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகை ஆவார். தமிழில் அமராவதி, அம்பாசமுத்திரம் அம்பானி படங்களில் நடித்துள்ளார். இவரும், அவரின் கணவர் ரவி ராணாவும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், நவநீத் கவூர் ராணா எம்.பி மற்றும் ரவி ராணா எம்.எல்.ஏ ஆகியோர் மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டருகே அனுமன் ஜெயந்தியை சிறப்பித்து பாடல் பாட இருப்பதாக அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து, அந்த இடத்திற்கு அருகே மறுநாளில் பிரதமர் நரேந்திர மோடி வந்து செல்லும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் அவர்களின் முடிவை கைவிட வேண்டும் என காவல் துறையினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அவர்கள் முடிவில் இருந்து பின்வாங்கிய நிலையில், அவர்கள் மத உணவுர்களை புண்படுத்தியதாக ஆளும் சிவசேனா கட்சியினர் தங்களின் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு சூழல் ஏற்படவே, காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், சிவசேனா கட்சியினர் அளித்த புகாரின் பேரில் எம்.பி-யான நடிகை நவநீத் கவூர், அவரின் கணவரான எம்.எல்.ஏ ரவி ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.