#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெரும் அதிர்ச்சி.. பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் மரணம்.. கார் விபத்தில் சோகம்.!
நண்பர்களுடன் காரில் பயணித்த பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விபத்தில் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள செல்சுறா பகுதியில், திரோரா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ விஜய் ரஹங்கடலேவின் மகன் அவிஷ்கார் தனது 7 நண்பர்களுடன் காரில் பயணம் செய்துகொண்டு இருந்தார்.
இவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் ஒன்றாக பயின்று வருகின்றனர். இந்நிலையில், செல்சுறா பகுதியில் உள்ள பாலம் அருகே கார் செல்கையில், கார் பாலத்தின் மேல் இருந்து கீழே பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த எம்.எல்.ஏ மகன் அவிஷ்கார் உட்பட அவரின் நண்பர்கள் 7 பேரும் பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.