கனகர லாரி - சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து: தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலி., 21 பேர் படுகாயம்.!
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 11 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் இருந்து நாஷிக் கனரக லாரி ஒன்று பயணம் செய்துகொண்டு இருந்தது. இதேபோல, யாவத்மால் நகரில் இருந்து மும்பை நோக்கி தனியார் சொகுசு பேருந்து பயணம் செய்துகொண்டு இருந்தது.
இந்த பேருந்தும் - கனரக லாரியும் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்து தீப்பற்றி இருந்துள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உயிருக்காக அலறித்துடித்தனர். பேருந்து தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியதால் பயணிகள் தங்களை காப்பாற்றக்கூறி அலறியுள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் விபத்து குறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 21 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் தடா புஸ் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர், தலா ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.