#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
14 வது மாடியில் இருந்து 19 வயது கல்லூரி மாணவி கீழே குதித்து தற்கொலை; காவல்துறை விசாரணை.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, அந்தேரி பகுதியில் உள்ள மில்லினியர் ஹெரிடேஜ் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது தளத்தில் வசித்து வரும் பெண்மணி விதி குமார் சிங் (வயது 19).
இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று திடீரென தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வளாகத்தின் காவலாளி, டிஎன் நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பெண்மணி கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. கடிதத்தில் பெண் எழுதியது குறித்த விபரம் இல்லை. மேற்படி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.