பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திப்பு சுல்தான் பெயரில் என்ன?.. குண்டர்களை ஏவி மலிவு அரசியல் செய்யும் பாஜக - அமைச்சர் குற்றச்சாட்டு.!
விளையாட்டு மைதானத்திற்கு திப்பு சுல்தானின் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங் தல் அமைப்பு போராட்டம் நடத்திய நிலையில், மகாராஷ்டிரா அமைச்சர் அதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பையில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானத்திற்கு, ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த திப்பு சுல்தானின் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், திப்பு சுல்தான் என்ற பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தல் போராட்டம் நடத்தியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கேட்காததால், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய மகாராஷ்டிரா மாநில பாதுகாப்புத்துறை அமைச்சர் அஸ்லாம் ஷேக், பாஜக பெயர் அரசியல் செய்வதாக குற்றசாட்டை முன்வைத்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "கடந்த 70 வருடத்தில் திப்பு சுல்தான் பெயரில் முரண்பாடுகள் இல்லை. பாஜக இன்று தனது குண்டர்களை ஏவிவிட்டு, நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் பொருட்டு செயல்பட்டுள்ளது. அரசின் திட்டங்களுக்கு பெயரிடுவது மூலமாக, நாட்டை வளர்ச்சியடைய விடக்கூடாது என செயல்பட்டு வருகிறது. பெயர்ச்சொல் விஷயத்தில் ஏற்படும் சர்ச்சையில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சுதந்திரத்திற்கு முன்னதாக ஆங்கிலேயருடன் போரிட்டு வீரமரணம் அடைந்தவர் திப்பு சுல்தான். இன்று நடைபெற்ற நிகழ்ச்சி திட்டத்தின் தொடக்க விழா. மக்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் செயலை செய்யாமல், பாஜக பெயரை வைத்து அரசியல் செய்வது ஏன்?" என்று தெரிவித்தார்.